ETV Bharat / bharat

தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது குறித்து டெல்லி பல்கலை விளக்கம் - bama

தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

Delhi university explanation on removing dalit writers work

author img

By

Published : Aug 26, 2021, 6:45 PM IST

Updated : Aug 26, 2021, 7:00 PM IST

டெல்லி: சுகிர்தராணி, பாமா, மகாஸ்வேதா தேவி ஆகியோரது படைப்புகள் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கு பல்கலைக்கழக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், பல்கலை நிர்வாகம் தற்போது இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.

ஒடுக்கப்படும் மக்களின் வலியைச் சொல்லும் பாமாவின் ‘சங்கதி’, சுகிர்தராணியின் ‘கைமாறு’, ‘என் உடல்’ கவிதைகள், மகாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’ ஆகியவை டெல்லி பல்கலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதுகுறித்து பல்கலை நிர்வாகம், பாடப்பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் ஏதுமில்லை. தனி மனிதர், ஒரு சமூக அமைப்பின் உணர்வை காயப்படுத்தும் வகையில் படைப்புகள் இருக்கக்கூடாது. படைப்பாளிகளின் சாதி மத பின்புலத்தை பார்த்து பல்கலை நிர்வாகம் செயல்படுவதில்லை என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஒலிக்க தடை; கோபத்தில் கவிஞர் சுகிர்தராணி

Last Updated : Aug 26, 2021, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.