ETV Bharat / bharat

'குற்றஞ்சாட்டபட்டவரின் சகோதரர் என்பதற்காகவே ஒருவரை சிறையில் வைத்திருக்க முடியாது' - டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு

டெல்லி வன்முறையில் குற்றஞ்சாட்டபட்டவரின் சகோதரர் என்பதற்காகவே ஒருவரை காரணமின்றி சிறையில் வைத்திருக்க முடியாது என்று டெல்லி உயர் நிதிமன்றம் தெரிவித்துள்ளது.

Delhi riots
Delhi riots
author img

By

Published : Dec 11, 2020, 5:54 PM IST

டெல்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பலரை காவல் துறையினர் கைது செய்துள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவரது வீட்டை கலவரக்காரர்கள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தாஹிர் உசேனின் சகோதரர் ஷா ஆலம் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஷா ஆலம் ஜாமின் கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் யாதவ், "இதில் கலவரக்காரர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட தாஹிர் உசேன் என்பவரது கட்டடத்தைப் பயன்படுத்தினார் என்பதே ஒரு குற்றச்சாட்டு. அவர்கள் பொது மற்றும் தனியார் சொத்துக்களை சூறையாடினர் என்ற பொதுவான வழக்கே இது!

இதில் ஷா ஆலம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் சகோதரர் என்பதற்காகவே அவரை காலம் முழுவதும் சிறையில் வைத்திருக்க முடியாது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிடுகிறேன்" என்று தெரிவித்தார்.

இருப்பினும், வழக்கு விசாரணை தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயலக்கூடாது என்று எச்சரித்த நீதிபதிகள், ஆலம் ஷா தனது ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் பெரியளவில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமைடந்தனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு: சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.