டெல்லி: புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (ஏப்.10) வன்முறை நடந்துள்ளது. பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவை, ஏபிவிபி அமைப்பினர் வலுகட்டாயமாக தடை செய்வதாகக் கூறி, இடதுசாரி மாணவ அமைப்பினர் வளாகத்தில் போர்கோடி தூக்கியுள்ளனர்.
அதேபோல் இடதுசாரி அமைப்பினர், ராம நவமியை முன்னிட்டு பூஜை செய்யும் நிகழ்வை நடத்தவோ அல்லது ஹோமம் வளர்க்கவோ இடையூறு செய்வதாக ஏவிபிவி அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதன்காரணமாக, இரு தரப்பினருக்கும் பல்கலை., வளாகத்தில் நேற்று மோதல் வலுத்து, வன்முறையாக மாறியது. இதில், ஆறு மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து, டெல்லி துணை காவல் கண்காணிப்பாளர் மனோஜ் கூறுகையில், "எங்களிடம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அடையாளம் தெரியாத ஏபிவிபி மாணவர்கள் மீது புகார் கொடுத்துள்ளதை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
மேலும், டெல்லி போலீசார் வன்முறைக்கு காரணமான அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்துக்கள் அல்லாதோர், 'சார்தாம் யாத்திரை'யில் பங்குகொள்ள தடை விதிக்க கோரிக்கை!