ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் விசாரணை - மழைக்கால கூட்டத்தொடர்

காங்கிரஸ் முக்கியத்தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தியது தொடர்பாக, டெல்லி காவல் துறையினர் ராகுல் காந்தி மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

author img

By

Published : Jul 27, 2021, 4:51 PM IST

டெல்லி: காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, நேற்று (ஜூலை 26) டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

ஆனால், நாடாளுமன்ற வளாகத்தினுள் டிராக்டரை கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது எனக் கூறி, டெல்லி காவல் துறையினர் ராகுல் காந்தி மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

டிராக்டர் கொண்டுவரப்பட்ட விதத்தை கண்டறியும் முனைப்பில் காவல் துறை

கடந்த ஜனவரி 26ஆம் தேதி டெல்லிக்குள் டிராக்டரில் நுழைந்த விவசாயிகளால், வன்முறை வெடித்ததாகக் கூறி, டெல்லி மாநகரில் டிராக்டர் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய டெல்லிப்பகுதிக்கு எவ்வாறு டிராக்டர் கொண்டு வரப்பட்டது என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், டிராக்டர் மிகவும் ரகசியமாக கன்டெய்னர் லாரியில் வைத்து டெல்லிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடர்பான சிசிடிவி காணொலிகளை சேகரித்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் டிராக்டரை வேறு வாகனமாக மாற்றி அமைத்துக் கொண்டு, சரியான நேரத்தில் ராகுல் காந்தியின் இடத்திற்கு கொண்டு வந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தில் டிராக்டர் பேரணி

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நேற்று நாடாளுமன்றத்தில் டிராக்டர் பேரணியை நடத்தியுள்ளார். குறிப்பாக, வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான பிரச்னையை எழுப்பவும் அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.

இத தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ' நாங்கள் விவசாயிகள் மூலம் நாடாளுமன்றத்துக்கு ஒரு தகவலை கூற நினைக்கிறோம். ஒன்றிய அரசு விவசாயிகளை வதைக்கிறது. வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்த எந்தவொரு விவாதத்தையும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர அனுமதிப்பதில்லை. எனவே, மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களையும் ரத்து செய்யக்கோரியும், அதை நாசூக்காக வலியுறுத்தவும் டிராக்டரில் வந்தேன்’ என்றார்.

இந்தப் பேரணியின்போது காங்கிரஸ் எம்.பி.,க்களும், பிற கட்சியினரைச் சார்ந்த பிரதாப் சிங் பஜ்வா, தீபேந்தர் ஹோடா, குர்ஜித் சிங் அஜிலா மற்றும் ரன்வீத் பிட் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும் பங்கெடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த டிராக்டரை காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் பி.வி ஆகியோரிடம் அவர் ஒப்படைத்தார்.

அதனால் அந்த இரண்டு தலைவர்களையும் காவல் துறையினர், டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆச்சரியங்கள் நிறைந்த ராமப்பா கோயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.