ETV Bharat / bharat

ஆண் பாலியல் தொழில் ஆசை.. 4 ஆயிரம் பேரிடம் கைவரிசை; பலே கும்பல் சிக்கியது எப்படி? - Online jobs

ஜிகலோ செயலி மூலம் வேலை வழங்குவதாக 4 ஆயிரம் பேரிடம் 1 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஜிகலோ
ஜிகலோ
author img

By

Published : Feb 9, 2023, 7:22 AM IST

டெல்லி: ஜிகலோ எனப்படும் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வழங்குவதாக 4 ஆயிரம் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். டெல்லியைச் சேர்ந்த இளைஞர் அளித்த புகாரில், குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட ஆன்லைன் மூலம் ஜிகலோ( gigolo app) வேலை பெற முயற்சித்து 40 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டெல்லி சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ஐ.பி(IP) முகவரியைக் கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர். இதில், மோசடியில் ஈடுபடுபவர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஜெய்ப்பூர் விரைந்த டெல்லி போலீசார் பதுங்கி இருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் குல்திப் மற்றும் சியாம் ஜோகி என அடையாளம் காணப்பட்டதாகவும், முன்னர் வேலை பார்த்த உணவகத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் மோசடியில் ஈடுபட்டதாகவும் போலீசார் கூறினர். ஜிகலோ இணையதளம் தொடங்கிய குல்திப் மற்றும் சியாம், அதன் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதாக இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

ஆசை வலையில் சிக்கிய இளைஞர்களிடம், உறுப்பினர் முன்பதிவுக்கு ஆயிரத்து 500 ரூபாய், வேலைவாய்ப்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் என அடுத்தடுத்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவது போல், நேக்கு போக்குடன் பேசி பல ஆயிரங்களை மோசடி செய்ததாக போலீசார் கூறினர். புகார் அளித்த டெல்லியைச் சேர்ந்த இளைஞரிடமும், இதேபோல் பேசிய இந்த கும்பல் 40 ஆயிரம் ரூபாயை கறந்ததாக போலீசார் கூறினர்.

ஹனி டிராப் மூலம் பல்வேறு இளைஞர்களிடம் பணத்தை ஆசையை தூண்டிய இருவர், ஏறத்தாழ 4 ஆயிரம் பேரிடம் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த இளைஞர் தவிர்த்து வேறுயாரும் இதுவரை புகார் அளிக்காததால், அதையே தோதாக எடுத்துக் கொண்டு இருவரும் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குல்திப் மற்றும் சியாம் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை கொண்டு இந்த மோசடியில் வேறு யாரும் ஈடுபட்டு உள்ளார்களா என துப்புதுலக்க உள்ளதாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க: அஜித் - மகிழ் திருமேனி - சந்தோஷ் நாராயணன் புதுக்கூட்டணி?!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.