டெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வந்தது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. அதுமட்டுமல்லாமல் வரலாற்றிலேயே முதன்முறையாக டீசலும் 100 ரூபாயை எட்டியது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் விலை குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தன.
இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் வாட் வரி குறைத்து வருகின்றன.
டெல்லியில் பெட்ரோல் விலை குறைப்பு
அந்த வகையில், டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 30 விழுக்காட்டில் இருந்து 19.40 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.8 குறைந்து விற்பனையாக உள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த உத்தரவை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விதித்துள்ளார். இன்றைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.86.67க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?