ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் மாடர்ன் பள்ளிகள் விரைவில் உருவாக்கப்படும் - மு.க. ஸ்டாலின் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் விரைவில் டில்லி மாடல் பள்ளிகள் நிறுவப்படும் என டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாடர்ன் பள்ளிகள் விரைவில் உருவாக்கப்படும் - மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Apr 1, 2022, 7:52 PM IST

டெல்லி: டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள தில்லி அரசு மாதிரி பள்ளியை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று (1.4.2022), பார்வையிட்டார்கள்.

அப்போது, டெல்லி அரசு கல்வித் துறை இயக்குநர் ஹிமான்சூ குப்தா டெல்லி கல்விமுறை பற்றிய முக்கிய கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.

மாடர்ன் பள்ளி: டில்லி அரசுப் பள்ளிகளில் தொழிற்முனைவோர் மற்றும் வணிகம் குறித்த பாடத்திட்டமான பிசினஸ் பிளாஸ்டர்ஸ் படிப்பில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 13 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

இதற்காக 2021-22ஆம் ஆண்டில் டெல்லி அரசால் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதாகும்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி மாதிரி பள்ளியின் வளர்ச்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டதோடு, அப்பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர், அப்பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டு, பாராட்டினார். மேலும், அப்பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்களுடன் உரையாடினார்.

தமிழ்நாட்டில் விரைவில் டெல்லி மாடல் பள்ளி: டெல்லி அரசு மாதிரி பள்ளியைப் பார்வையிட்ட பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, “டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மாடர்ன் பள்ளியை உருவாக்கி, அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதனால், டெல்லிக்கு வந்த நான் அந்தப் பள்ளியை பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டபோது, நிச்சயமாக நீங்கள் வருகிறபோது நானே வரவேற்று அதை அழைத்துச் சென்று காண்பிக்கிறேன் என்று சொல்லி, என்னை இங்கு அவரே அழைத்து வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கக்கூடிய எங்களுடைய அரசு, எல்லாத் துறைகளுக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறதோ, அதைவிட அதிகமான அளவிற்கு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவத்தை தந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இந்த மாடர்ன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோன்ற பள்ளிகளை தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தப் பணிகள் முடிவுற்று அந்தப் பள்ளியை நாங்கள் திறக்கிற நேரத்தில், நிச்சயமாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர், அரசு மொஹலா கிளினிக்கை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, 500 மொஹலா கிளினிக்குகள் உள்ளதாகவும், அதனை 1000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இக்கிளினிக்குகளை டில்லி மெட்ரோ இரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் தொடங்க உள்ளதாகவும், மகளிருக்கான தனி மொஹலா கிளினிக்குகளை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை - சென்னை மேயர் பிரியா ராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.