ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியிருக்கும், பெரும்பாலான நேரத்தை ஆன்லைனில்தான் செலவிடுகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் புகுந்து விளையாடுகின்றனர்.
அவ்வப்போது, பல சுவாரஸ்ய நிகழ்வுகளும் ஆன்லைன் ஆர்டரில் அரங்கேறும். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அமேசானில் தனது குழந்தைக்காக ரிமோட் கன்ட்ரோல் கார் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால், வந்த பார்சலைத் திறந்த பார்த்தபோது, அதில் பார்லே-ஜி பிஸ்கட் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பலரும் சமூக வலைதளத்தில் அமேசானை கலாய்த்துப் பதிவிட்டிருந்தனர். சிலர் நல்ல வேலையாக, கல் வரவில்லை என சந்தோஷப்படுங்கள் எனக் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.
இவ்விவகாரத்தில் பணத்தைத் திருப்பி அளிப்பதாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் மவுத் வாஷ் (mouth wash) ஆர்டர் செய்த மும்பை வாசிக்கு, ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திண்பண்டங்களைத் தேடி சமையலறையில் நுழைந்த காட்டு யானை!