இந்தியாவில் கரோனாவின் 2ஆம் அலை, விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் இரண்டு லட்சத்தைத் தாண்டுகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லி, கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டிவிட்டது.
இதனைக் கருத்தில்கொண்டு, கரோனா பரவலைத் தடுத்திட இன்று (ஏப்ரல் 20) முதல் 26ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாநிலங்களவை ஊழியர்களை வரும் ஏப்ரல் 23ஆம் தேதிவரை, வீட்டிலிருந்தபடியே வேலைசெய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், "மாநிலங்களவையின் அனைத்து வகை ஊழியர்களும், இன்றுமுதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர சூழ்நிலையில் மட்டுமே, உயர் அலுவலர்களால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: டெல்லியிலிருந்து வெளியேறும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள்