டெல்லி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுவருகின்றன. அந்த வகையில், டெல்லியில் கரோனா பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "டெல்லியில் உள்ள பள்ளிகளில் தெர்மல் ஸ்கேனிங் இல்லாமல் வளாகத்திற்குள் மாணவர்கள், ஊழியர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.
மாணவர்களோ, ஆசிரியர்களோ, ஊழியர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், தகுந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்கள் மதிய உணவு, ஸ்டேஷனரி பொருட்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஏப். 18ஆம் தேதி 501 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஏப். 21) 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி - போரிஸ் ஜான்சன் சந்திப்பு