ETV Bharat / bharat

இளம்பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த கொடூரம் : டெல்லி ஆளுநர் வேதனை... - டெல்லி ஆளுநர் ட்விட்டர்

தலைநகரில் இளம்பெண் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தை கேட்டு வெட்கித் தலை குனிவதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆளுநர்
டெல்லி ஆளுநர்
author img

By

Published : Jan 2, 2023, 10:12 PM IST

இளம் பெண் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் : டெல்லி ஆளுநர் வேதனை

டெல்லி: தலைநகர் டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காருக்கு அடியில், சிக்கிய பெண் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த பெண்ணின் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி உள்ளது. பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை நேரில் கண்ட அதேபகுதியைச் சேர்ந்த தீபக் தஹியா கூறியதாவது, "அதிகாலை வேளையில் பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் நிலை தடுமாறி பெண் கீழே விழுந்தார்.

கார் டயரில் பெண் சிக்கிய நிலையில், அதை கண்டுகொள்ளாமல் கார் யூடர்ன் அடித்துச்சென்றது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தேன். அதே கார் சில மணி நேரம் கழித்து, மீண்டும் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து மீண்டும் யூடர்ன் அடித்தது.

4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அதேசாலையில் 4 - 5 முறை கார் சென்றது. ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்ணை தரதரவென கார் இழுத்துச் சென்றது. இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்று நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் சென்றது’ என தீபக் தஹியா தெரிவித்துள்ளார்.

சுல்தான்புரி பகுதியில் ஆடைகள் கிழிந்தும், உடல் உறுப்புகள் கிழிந்து தொங்கியபடியும் கிடந்த இளம் பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு கார் நம்பரை அடையாளம் கண்ட போலீசார், 5 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் உணவு டெலிவரி கிரெடிட் கார்டு ஏஜென்ட், உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று விபத்து ஏற்படுத்தியது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், காரில் அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததால் எதுவும் கேட்கவில்லை என்றும் இளைஞர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

சம்பவ நேரத்தின்போது வாகனத்தை ஓட்டிய இளைஞர் மது அருந்தி இருந்தாரா என அறிய ரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா டிவிட்டரில், "சுல்தான்புரியில் நடந்த சம்பவத்தால் வெட்கித் தலைகுனிகிறேன். இது மனிதாபிமானமற்ற செயல். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அசுர குணம் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டெல்லி காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜிம்முக்கு வெளியே கடத்தல் பிளான்.. புயலென ஓட்டம் பிடித்த பெண்.. பல்பு வாங்கிய கும்பல்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.