ஜெய்சல்மர் (ராஜஸ்தான்) : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் கிராமத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை டெல்லி காவலர்கள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய- பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பொக்ரான் கிராமத்திலிருந்து ஒருவர் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் பூர்விகம் பிகானீர் மாவட்டம் ஆகும். அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. முதல்கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெல்லி போலீசார் கைது செய்துள்ள நபரின் பெயர் ஹபீப் கான். இவர் காய்கறி வியாபாரி போல் அப்பகுதியில் சுற்றி திரிந்து இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு வழங்கியதாக தெரிகிறது.
டெல்லி குற்றவியல் காவலர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : உளவாளி டூ எழுத்தாளர் - உலகப் புகழ்பெற்ற ஜான் லு கேரே காலமானார்!