ETV Bharat / bharat

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு தளர்வு - கெஜ்ரிவால் முடிவு - டெல்லியில் தனியார் நிறுவனங்கள் 50% இயங்கலாம்

டெல்லியில் வார இறுதி நாள்கள் ஊரங்கைத் தளர்த்துவது தொடர்பாக அந்த யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு தளர்வு
டெல்லியில் வார இறுதி ஊரடங்கு தளர்வு
author img

By

Published : Jan 21, 2022, 12:43 PM IST

டெல்லி: மேலும் தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு (பணியாளர்கள்) திறனுடன் மீண்டும் தொடங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் சந்தைகளில் ஒற்றைப்படை - இரட்டைப் படை இலக்க வருகை முறையை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஊரடங்கானது வார இறுதி நாள்களான வெள்ளிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து திங்கள்கிழமை காலை 5 மணிவரை நடைமுறையில் இருந்துவந்தது. கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், ஊரடங்கு தளர்வு குறித்த கோப்பு ஒப்புதலுக்காக துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒற்றைப்படை - இரட்டைப்படை அடிப்படையில் செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் இனி அனைத்து நாள்களிலும் திறக்கலாம். தனியார் அலுவலகங்கள் முடிந்தவரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை மாற்றச் சொன்னாலும், இனி 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.

வார இறுதி ஊரடங்கின்போது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள், அவசரகாலச் சூழலை எதிர்கொள்பவர்கள் மட்டும் அரசின் அனுமதி அட்டைகள் அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் வெளியே செல்ல முடியும்.

டெல்லியில் வியாழக்கிழமை மட்டும் புதிதாக 12 ஆயிரத்து 306 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது நேற்றைய அடிப்படையில் கடைசி 24 மணி நேரத்தில் 10.72 விழுக்காடு என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: மம்முட்டியைத் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு கரோனா பாசிட்டிவ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.