டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் ஆன்லைன் மோசடியில் சிக்கிய பொருளை இழந்ததாக கூறப்படுகிறது.
ஹர்திதா, பயன்படுத்திய பொருள்கள் விற்பனை தளமான ஒஎல்எக்ஸ்சில் (OLX) சில பொருள்களை விற்பனை செய்துள்ளார். இந்தப் பொருள்களை பெற்றுக்கொண்ட நபர், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக ஹர்ஷிதா தனது கியூஆர் குறியீட்டெண்ணை பகிர்ந்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் பணம் அனுப்பவில்லை. மாறாக ஏமாற்றிவிட்டார். இதனை தாமதமாக உணர்ந்த ஹர்ஷிதா, இது குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்கான சிறப்பு செயலியை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்