ETV Bharat / bharat

மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் கெஜ்ரிவால்... என்னவாக இருக்கும்? - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவளிக்கக் கோரி ஜூன் 1ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.

CM
CM
author img

By

Published : May 31, 2023, 4:26 PM IST

Updated : May 31, 2023, 5:03 PM IST

டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை (ஜூன். 1) சந்திக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகளை நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கூறி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய அளவிலான எதிர்க் கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார். அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிராவில் தேசியவாதா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் "நாளை (ஜூன். 1) தமிழ்நாடு முதலமைச்சர் மு,க. ஸ்டாலினை சந்திக்க உள்ளேன் மத்திய அரசு கொண்டு வந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாய விரோத டெல்லி எதிர்ப்பு அவசரச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்க உள்ளதாக" அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

  • Will be meeting Tamil Nadu CM Thiru @mkstalin in Chennai tomorrow (1st June) to seek DMK's support against Centre's unconstitutional-undemocratic 'Anti-Delhi' Ordinance.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேநேரம், டெல்லி அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கப்போவதில்லை எனக் கூறி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள திமுகவின் நிலைப்பாடு என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. டெல்லி முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் அளிக்க உள்ளார் என்ற கேள்வி பலமாக எழுந்து உள்ளது.

இதையும் படிங்க : கிராண்ட் பாதருக்கு பதில் பாதராகும் காட்பாதர் நடிகர்... 83 வயதில் 4வது குழந்தை!

Last Updated : May 31, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.