ETV Bharat / bharat

"பாஜகவை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய தேசபக்தி" - அரவிந்த் கெஜ்ரிவால் - today latest news

Delhi CM Arvind Kejriwal: "2024இல் பாஜகவை ஆட்சியிலிருந்து நீக்குவதே நாம் தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய தேசபக்தி செயலாகும்" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Delhi CM Arvind Kejriwal
பாஜக-வை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய தேசபக்தி - அரவிந்த் கெஜ்ரிவால்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 8:55 AM IST

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்றைய முன்தினம் (அக் 21) டெல்லியில் தனது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் போசுகையில், "எனது தொகுதி மக்களும், ஆம் ஆத்மி தொண்டர்களும் எந்த அரசியல் பின்னணியில் இருந்தும் வந்தவர்கள் அல்ல. எங்கள் கட்சியும் அரசியல் பின்னணி கொண்ட கட்சி அல்ல.

மேலும், நான் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல. மற்ற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதைக் காணும் அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சியினர் கண்ணியமாக இருப்பதால், மக்களால் விரும்பப்படுகிறார்கள். இதுதான் ஆம் ஆத்மியின் டிரேட் மார்க்.

இரண்டாவது முறையாக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக நாட்டை மிகப்பெரிய முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. இன்று நாட்டின் சூழல் எல்லாத் தரப்பிலும் மோசமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் அமைதியின்மை, சண்டைகள், வன்முறைகள், ஊழல்கள், கொள்ளைகள். இது போன்ற சூழலலை இதற்கு முன்பு இந்த சமூகத்தில் பார்த்ததில்லை. ஆகவே, 2024இல் பாஜகவை ஆட்சியிலிருந்து நீக்குவதே நாம் தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய தேசபக்தி செயலாகும். அப்போதுதான் நாடும் முன்னேறும்.

மேலும், அவர்கள் இதுவரை எடுத்த முடிவுகளை எதற்காக எடுத்தார்கள் என்பது யாருக்கும் புரியாத ஒன்று. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வேலைகள், தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் பலவும் முடக்கப்பட்டு, இந்தியப் பொருளாதாரம் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

இது மட்டுமல்லாது, பாஜக அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி யாரும் புரிந்து கொள்ளாத அளவுக்கு சிக்கலானது. பல பெரிய தொழிலதிபர்களுக்கு பின்னால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்றவற்றை வைத்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில், 12 லட்சம் பணக்கார தனிநபர்கள் மற்றும் வணிகர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளனர். இது மிகவும் மோசமான நிலை.

சமூக விரோத செயலில் ஈடுபடும் அனைவருக்கும் பாஜகவில் புகலிடம் உண்டு. அவர்கள் பாஜகவில் சேர்ந்தால், எந்த புலனாய்வு அமைப்பும் அவர்களைத் தொட துணிவதில்லை. திருடர்கள், குண்டர்கள் மற்றும் பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் என அனைவரும் பாஜகவில்தான் உள்ளனர். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவைதான் இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகள்.

இதுவரை மக்களுக்கு மாற்று வழி இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது, அனைவரும் இந்தியாவை (எதிர்கட்சி கூட்டணி) மாற்று வழியாக பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து இந்தியா பிழைத்துள்ளது. 2024இல் பாஜக அரசு அமையாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: அகிலேஷ் யாதவ் 'வருங்கால பிரதமர்' என போஸ்டர்.. பகல் கனவு காண்பதாக உ.பி பா.ஜ.க அமைச்சர் சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.