டெல்லி: காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பான சஃபர் தகவலின்படி, டெல்லியில் தொடர்ந்து கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் சஃப்தர்ஜங் மற்றும் பாலம் ஆகிய 200 மீட்டர் அளவில் மூடுபனி பதிவாகியுள்ளது. மாநிலத்தில் காற்று மாசுபாடு 185 முதல் 270வரை உள்ளதாக தெரிகிறது. இதனால் காற்றின் தரக்குறியீடு மிகுந்த மோசமான நிலையிலேயே உள்ளது. மேலும், நாளை காற்றின் மாசுபாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக டெல்லியிலிருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாக புறப்படுகின்றன. ஆனால், விமானங்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் அதிகரிக்கும் மூடுபனி - வாகன ஓட்டிகள் அவதி