ETV Bharat / bharat

48 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்ட விமானி... ஒரு நிமிடத்தில் பறிபோன உயிர்கள்... ! - யாத்ரீகர்கள்

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி, தொடர்ந்து 48 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது. 48 மணி நேரம் பறந்த அவர், ஒரு நிமிடத்தில் உயிரைப் பறிகொடுத்துவிட்டார்.

pilot
pilot
author img

By

Published : Oct 19, 2022, 9:29 PM IST

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் வெடித்த விபத்தில், யாத்ரீகர்கள், விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பதை நேரவரிசையில் விரிவாகப் பார்ப்போம்...

ஹெலிகாப்டர் புறப்பாடு: ஹெலிகாப்டர் நேற்று(அக்.18) காலை 11.30 மணிக்கு, குப்த்காஷியில் இருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. 11.39 மணிக்கு கேதார்நாத்தைச் சென்றடைந்தது. அங்கு பக்தர்களை இறக்கிவிட்டு, ஹெலிகாப்டர் மூன்று நிமிடம் காத்திருந்தது. பிறகு அங்கிருந்து 6 யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு 11.42 மணிக்கு குப்த்காஷிக்கு திரும்பியது.

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விபத்து: குப்த்காஷிக்கு புறப்பட்ட ஒரு நிமிடத்தில், அதாவது சரியாக 11.43 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்து கேதர்நாத் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நடந்தது.

ஆறு யாத்ரீகர்கள் உயிரிழப்பு: இதில் விமானி மற்றும் தமிழ்நாடு, குஜராத்தைச் சேர்ந்த 6 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று யாத்ரீகர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் விமானி உள்பட 7 பேர் பலியாகினர்.

பனிமூட்டமே காரணம்: அடர்ந்த மூடுபனியே விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிலரது உடல்கள் எரிந்ததாகவும், சிலரது உடல் பாகங்கள் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்புப் பணியில் சிக்கல்: மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் அங்கு மழையும், பனியும் பொழியத் தொடங்கியது. இதனால் உடல்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

டிஜிசிஏ குழு வருகை: உத்தரகாண்ட் மாநில விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிசங்கரின் உத்தரவின் பேரில், விமான போக்குவரத்து இயக்குனரக குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்ற ஆய்வு செய்தனர்.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு: மீட்புப் பணிக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

விபத்து குறித்து தகவல் தெரிவித்த யாத்ரீகர்கள்: ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது, அவ்வழியாக கேதர்நாத் சென்ற யாத்ரீகர்கள் ஹெலிகாப்டர் உடைந்து நொறுங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் ஹெலிகாப்டர் முற்றிலும் உடைந்து சிதறியது. ஹெலிகாப்டரின் பெரும்பாலான பகுதியில் எரிந்து சாம்பலாயின. உடல்கள் சிதறிக் கிடந்தன. இதைக் கண்டு பதறிய யாத்ரீகர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

அனுபவம் வாய்ந்த விமானி: இந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானியும் உயிரிழந்தார். விமானி அனில் குமார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவர் 48 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். கேதர்நாத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விமான சேவையைச் செய்து வந்தார்.

கேதர்நாத் யாத்திரைக்கு யாத்ரீகர்கள் ஆர்வம்: கரோனா பரவலுக்குப் பிறகு இந்த ஆண்டு முழுவீச்சில் கேதர்நாத் யாத்திரை தொடங்கியது. ஏராளாமான யாத்ரீகர்கள் உற்சாகத்துடன் யாத்திரை சென்றனர். அதேபோல் ஹெலிகாப்டர் சேவைகளையும் விரும்பி பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 1,42,100 பயணிகள் ஹெலிகாப்டர் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ! போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.