ETV Bharat / bharat

தீபக் சாஹர் - ஜெயா பரத்வாஜ் திருமணம்: பஞ்சாபி, பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய மணமக்கள்! - தீபக் சாஹர் திருமண வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் - ஜெயா பரத்வாஜ் திருமணம் இன்று ஆக்ராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் மணமக்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம்
தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம்
author img

By

Published : Jun 1, 2022, 8:22 PM IST

ஆக்ரா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கும் - அவரது காதலி ஜெயா பரத்வாஜுக்கும் இன்று (ஜூன் 1) ஆக்ராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் கலந்து கலந்து கொள்கின்றனர். தோனி, கோலி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

சங்கீத் நிகழ்ச்சியில் நடனமாடிய தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ்

முன்னதாக நேற்று (மே 31) இரவு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் தீபக் சாஹர், ஜெயாவுடன் இணைந்து பஞ்சாபி, பாலிவுட் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார். உறவினர்கள், நண்பர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். சங்கீத் நிகழ்ச்சியில் தீபக் சாஹர் சிவப்பு நிற குர்தா-பைஜாமாவும், ஜெயா நீல நிறப் புடவை அணிந்தும் அழகாக வலம் வந்தனர்.

தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணம்
தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் இணை

தீபக் சாஹர் - ஜெயா பரத்வாஜ் திருமணம் இன்று இரவு ஆக்ரா ஃபதேஹாபாத் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். திருமண விருந்தில் பிரபல உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் சங்கீத்
தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் ஆகியோரின் சங்கீத் நிகழ்வு

இதையும் படிங்க: மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்: உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.