டெல்லி: உலகம் முழுவதும் கரோனா, ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவிவருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. இதனிடையே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இந்தியாவில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதுவரை 3.5 கோடிக்கும் அதிகமான கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. இதையடுத்து, 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. அத்துடன் மார்ச் முதல் வாரத்தில் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இப்போதைக்கு இல்லை
இதுகுறித்து தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், ஜனவரி முதல் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முதல்கட்டமாக தொடங்கிஉள்ளது. இரண்டு வாரங்களில் 50 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டன.
இந்தப் வேகத்தைப் பார்க்கும்போது, மார்ச் மாதத்தில் 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படலாம். இதுகுறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த வயது வரம்பில் நாடு முழவதும் 7.5 கோடிக்கும் அதிகமான சிறார்கள் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கெட்: பயணிகள் அதிர்ச்சி