உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிப்பாறை விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீரென பனிப்பாறை வெடித்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி பாதிப்புக்குள்ளாகினர்.
இதையடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை குழு, மாநில பேரிடர் மேலாண்மை குழு இணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.
இதுவரை 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு பேரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
இதேப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பனிப்பாறை விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடருக்கு முழு அரசு மரியாதை