ETV Bharat / bharat

குடிநீர் குடித்து உயிரிழப்பு - கர்நாடகாவில் சோகம்

கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Oct 6, 2021, 2:26 PM IST

குடிநீர்
குடிநீர்

கர்நாடகா: விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஹூவினஹகடஹளி அருகே மகரப்பி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் ஆழ்துளை கிணற்று நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆழ்துளை கிணறுகளுக்குப் புதிய குழாய் பதிக்கும்போது பழைய குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த அசுத்தமான குடிநீரை குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஒரு சிலருக்கு தலைசுற்றலும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் குடித்து உயிரிழப்பு
குடிநீர் குடித்து உயிரிழப்பு

ஆழ்துளை கிணறுகள் மூடல்

இந்தச் சம்பவத்தை அடுத்து, விஜ‌யநகர் மாவட்டம் ஆழ்துளைக் கிணற்றின் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்திய மூன்று ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன. டேங்கர் லாரிகள் மூலம் மகரப்பி கிராமத்தில் குடிநீர் விநியோகம் நடந்துவருகிறது.

குடிநீர் குடித்து உயிரிழப்பு
குடிநீர் குடித்து உயிரிழப்பு

இது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ''அசுத்தமாக நீர் குடித்து ஆறு பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அலுவலர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதையும் படிங்க : லகிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.