பெஹ்ரோர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் பெஹ்ரோர் பகுதியில் இறந்து ஒன்றரை ஆண்டுகளானவர் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகளில் இடையூறு செய்யாமல் இருப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 25ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பு காவல் துறையினரால் பெஹ்ரோர், நீம்ரானா மற்றும் மந்தன் பகுதியில் சட்ட ஒழுங்கு ஏற்படக் காரணமாக உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்துள்ளனர். இந்த குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் பெஹ்ரோர் உட்பிரிவின் கன்கர் சாஜா கிராமத்தில் வசிக்கும் கந்தன்லால் யாதவ் என்பவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
பெஹ்ரோர் பகுதியில் வசிக்கும் கந்தன்லால் 2022ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவரின் குடும்பத்தினர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி அன்று அவரின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று (நவ.6) கந்தன்லால் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: விறுவிறுப்படையும் ராஜஸ்தான் தேர்தல் களம்.. முதலமைச்சர் அசோக் கெலாட் வேட்பு மனுத் தாக்கல்!
நீதிமன்ற நோட்டீஸ் குறித்து கந்தன்லாலின் மகன் ராம்சந்திர யாதவ் கூறும் போது, எனது தந்தை கந்தன்லால் யாதவ் உயிருடன் இருந்த போது அவர் மீது எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. எனது தந்தை விவசாயம் செய்து வந்தார் மேலும் கிராம மக்கள் அனைவரிடமும் நட்புடன் இருந்து வந்தார் இதுவரை அவருக்கு இது போன்ற நீதிமன்ற நோட்டீஸ் வந்தது இல்லை. அவர் இறந்த பிறகு நீதிமன்றத்திலிருந்து முதன் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மேலும் பெஹ்ரோர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தினால் இதுவரை 618 பேர்கள் மீது புகார்கள் பெறப்பட்டு நேற்று (நவ.5) வரை 389 பேருக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் 604 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த கந்தன்லால் பெயர் தவறாக எப்படிக் காவல் துறையினரின் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் காவல் நிலைய பொறுப்பாளர் ராஜ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிராமம் ஒன்று..! எம்.எல்.ஏ மட்டும் ரெண்டு..! அரசியல் ஆச்சரியம் நிறைந்த அஞ்சோரா கிராமம்!