டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் கரோனா தடுப்பிற்கு செலுத்தப்பட்டுவருகிறது.
இதில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸிற்கும், இரண்டாம் டோஸிற்குமான இடைவெளி, முதலில் 4 - 6 வாரங்களாக இருந்தது. அதன் பின், 6 - 8 வாரங்களாக மாற்றப்பட்டது. தற்போது அதன் இடைவெளியை 12 -16 வாரங்களாக நீட்டிக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 12 -16 வாரங்களில் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டால், அதன் பாதுகாப்பு அதிகரிக்கிறது என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை ஏற்றுக்கொள்ளும் என எண்ணப்படுகிறது.
மத்திய அரசால் மே 1ஆம் தேதி பிறகு, 18 வயதை எட்டியோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும், 45 வயதை தாண்டியோரும் முதல் டோஸ் போட்டுக்கொண்டு இரண்டாம் டோஸ் போட காத்துக்கொண்டிருப்பதால் தடுப்பூசிக்கு கடும் தடுப்பாடு நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவக்சீன் தடுப்பூசியின் கால இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை.
இதையும் படிங்க: ’இனி 2 வயது முதல் கோவாக்சின் தடுப்பூசி’ - டிசிஜிஐ அனுமதி