மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியான ரியாஸ் பத்தி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது போட்டப்பட்டுள்ளன. அவர் இன்று (செப்.27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம், ரியாஸ் பத்தி மற்றும் முகமது சலீம் ஃபுரூட் ஆகியோர் மிரட்டி 30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துள்ளனர்.
இதுதொடர்பாக வெர்சோவா போலீசில் அந்த தொழிலதிபர் புகார் அளித்தார். அந்த வழக்கில் தேடப்பட்டுவந்த ரியாஸ் பத்தி கைது செய்யப்பட்டுள்ளார். ரியாஸ் பத்தி மீது நில அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ரியாஸ் பத்தி போலி பாஸ்போர்ட் மூலம் நாட்டை விட்டுச் செல்லவும் முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் விசாரணை நேரடி ஒளிபரப்பு தொடங்கியது