ETV Bharat / bharat

தானிஷ் சித்திக் உடல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அடக்கம் - தானிஷ் சித்திக் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது

பயங்கரவாதிகள் தாக்குதலின் இடையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக்கின் உடல் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக்கத்தின் இடுகாட்டில் புதைக்கப்பட இருக்கிறது.

தானிஷ் சித்திக்
தானிஷ் சித்திக்
author img

By

Published : Jul 18, 2021, 11:12 PM IST

Updated : Jul 18, 2021, 11:20 PM IST

டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரின் உடல் பத்திரமாக இன்று (ஜூலை 18) டெல்லி கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே அவரது உடல் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சித்திக்கின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனை பல்கலைக்கழக நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.

எனவே அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட இருக்கிறது. மேலும், அவரது உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தானிஷ் சித்திக் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக்கத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 18, 2021, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.