ETV Bharat / bharat

ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! - தலிபான் தாக்குதலில் ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் உயிரிழப்பு

ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஒளிப்படக் கலைஞர் தானிஷ் சித்திக் (41) காந்தஹாரில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தார்.

Danish siddiqui died in taliban attack
Danish siddiqui died in taliban attack
author img

By

Published : Jul 16, 2021, 3:32 PM IST

Updated : Jul 16, 2021, 3:52 PM IST

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் தானிஷ் சித்திக் உயிரிழந்தார் என ஆப்கானுக்கான இந்திய தூதர் ஃபரித் மாமண்ட்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தானிஷ் சித்திக்
தானிஷ் சித்திக்

இதுகுறித்து அவர், என் நண்பன் டானிஷ் சித்திக்கின் மரண செய்தி கேட்டு மனம் கலங்கி நிற்கிறேன். ஆப்கன் பாதுகாப்பு படையுடன் இருக்கும் வேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் காபுல் செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன். அவரது குடும்பத்தாருக்கும், ராய்டர் செய்தி நிறுவனத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரோஹிங்கியா
ரோஹிங்கியா

ரோஹிங்கியா இனப்படுகொலை நேரத்தில், மக்கள் புலம்பெயர்ந்ததை புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தியதற்காக புலிட்சர் விருதை வென்றவர் தானிஷ் சித்திக்.

கரோனா இறப்புகள்
கரோனா இறப்புகள்

கரோனாவால் இறந்தவர்கள் எரிக்கப்படும் டெல்லியின் டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது இழப்பு மக்களுக்கு பேரிழப்பு ஆகும்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவின் கோரமுகத்தை தன் கேமரா லென்ஸ் வாயிலாக உலகறியச் செய்த டானிஸ் சித்திக் இறப்பு செய்தி கேட்டு கலங்குகிறேன். வன்முறையும் பயங்கரவாதமும் எந்த வடிவில் வந்தாலும் அதை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் இரங்கல்
ஸ்டாலின் இரங்கல்

இதையும் படிங்க: 111 நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு!

Last Updated : Jul 16, 2021, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.