காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனித் தொகுதியான(Reserve) வடகாமில் காங்கிரஸ் வேட்பாளர், ஜிக்னேஷ் மேவானி 3 ஆயிரத்து 840 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி 78 ஆயிரத்து 845 வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக வடகாம் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு சுயேட்சையாக வெற்றி கண்ட ஜிக்னேஷ் மேவானி, தற்போது காங்கிரஸ் சார்பில் களமிறங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஜிக்னேஷ் மேவானி போராடி வருகிறார். அவரை எதிர்த்து களம் கண்ட பா.ஜ.க. வேட்பாளர் மாணிபாய் வாகேலா 75 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். கடந்த 2017 சட்டப் பேரவைத்தேர்தலின் போது சீட்டு தராத கோபத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய மணிபாய் வாகேலா பின்னர் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
இதையும் படிங்க: Live Update: குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்!