தர்மசாலா: இமாச்சலப் பிரதேச தலைநகர் தர்மசாலா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா (85) கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், “பயனுள்ள இந்தத் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
திபெத்தின் தற்போதைய ஆன்மிக குருவான 14ஆவது தலாய் லாமா அம்டோ மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஒன்றில் ஜூலை 6ஆம் தேதி 1935ஆம் ஆண்டு பிறந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.