அஸ்ஸாம் மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழையால் 32 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அஸ்ஸாம் மாநிலம் குறித்து திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழை இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது; அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு உதவும் வகையில், காடன் ஃபோட்ராங் அறக்கட்டளை (Gaden Phodrang Trust)சார்பில் நிதியுதவி அளிக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அசாமில் மோசம் அடையும் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்பு 73ஆக உயர்வு