ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு தலாய் லாமா பங்களிப்பு!

கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையுடன் இந்தியா போராடிவரும் நிலையில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா பிஎம்-கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு தலாய் லாமா பங்களிப்பு!
கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு தலாய் லாமா பங்களிப்பு!
author img

By

Published : Apr 27, 2021, 10:19 AM IST

தர்மசாலா: நாடு கடந்த திபெத்திய அரசு வட இந்திய மலை நகரமான இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் அமைந்துள்ளது.

"கரோனா தொற்றுநோய்க்கு எதிராக இந்தியா உள்பட உலகெங்கிலும் தொடர்ந்து வரும் சவாலை நான் தொடர்ந்து பின்பற்றிவருகிறேன்" என்று தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த முக்கியமான நேரத்தில், ஆபத்தான கரோனா எழுச்சியின்போது, ’சக இந்திய சகோதர சகோதரிகளுடனான’ எங்கள் ஒற்றுமையின் அடையாளமாக பிரதமர்-கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பதாக அறிவித்தார்.

மேலும், "இந்த அழிவுகரமான தொற்றுநோயைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், குறிப்பாக முன்களப் பணியாளர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பெறுகிறேன். தொற்றுநோய் அச்சுறுத்தல் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.