ETV Bharat / bharat

Threads: த்ரெட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு 50% வரை குறைவு - ஷாக்கிங் டேட்டா! - த்ரெட்ஸ் செயலியின் பயனாளர்கள் எண்ணிக்கை

மெட்டா நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலியின் பதிவுகள் மற்றும் பயனர்கள் எண்ணிக்கை ஒரு சில நாட்களிலேயே உச்சத்தை தொட்ட நிலையில், த்ரெட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Threads
த்ரெட்ஸ்
author img

By

Published : Jul 17, 2023, 1:47 PM IST

டெல்லி: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்விட்டர் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்விட்டர் பதிவுகளுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனர்கள் சோர்வடைந்திருந்த நிலையில், இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்தி மெட்டா நிறுவனம் 'த்ரெட்ஸ்' செயலியை உருவாக்கியது. ட்விட்டருக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்ட த்ரெட்ஸ் செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கியது. இந்த த்ரெட்ஸ் செயலி கடந்த 5ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்காக இந்த செயலியை மெட்டா அறிமுகம் செய்தது.

த்ரெட்ஸ் செயலி ட்விட்டரைப் போலவே முழுவதும் டெக்ஸ்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே நாட்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் கணக்கு தொடங்கியதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். அதேபோல் 7 மணி நேரத்திலேயே த்ரெட்ஸ் செயலியில் ஒரு கோடி பதிவுகள் இடப்பட்டன. இந்த த்ரெட்ஸ் செயலியால் ட்விட்டர் நிறுவனத்திற்கு ஆபத்து என்றும் பல்வேறு தரப்பினரும் கூறினர்.

இதனிடையே ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியே த்ரெட்ஸ் செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பயனாளர்களிடையே த்ரெட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரெட்ஸ் செயலியை தினசரி 20 நிமிடங்கள் பயன்படுத்திய பயனர்கள் தற்போது வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துவதாகவும், தினசரி பயன்பாடு 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தரவுகளின்படி, த்ரெட்ஸ் செயலியின் தினசரி ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துபவர்களில் த்ரெட்ஸ் செயலியின் தினசரி ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியபோது நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்புதான் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதனால், இப்போது புதிய அம்சங்களை வழங்குவதிலும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: த்ரெட்ஸ் செயலி ஒரு 'காப்பிகேட்' - சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.