ETV Bharat / bharat

தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென்னக ரயில்வே

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களை குறித்த விவரங்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் சேவை
சிறப்பு ரயில் சேவை
author img

By

Published : Dec 5, 2020, 9:17 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் படி ரயில்களின் விவரங்கள்,

1. ரயில் வண்டி எண் 07652/07651 காச்சிகுடா - செங்கல்பட்டு - காச்சிகுடா சிறப்பு ரயில்கள்

காச்சிகுடா ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கப்பட்டு சென்றடையும் இந்த ரயில், தினமும் மாலை 16.30 மணிக்கு (மாலை 4.30) காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மறு நாள் காலை 8.20 மணி அளவில் செங்கல்பட்டு சென்றடையும்

அதேபோல், வண்டி எண் 07651 செங்கல்பட்டு- காச்சிகுடா இடையிலான சிறப்பு ரயில், வரும் 8ஆம் தேதி முதல் தினமும் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்திலிருந்து மதியம் 15.35 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு காச்சிக்குடா சென்றடையும்.

இந்த இரு ரயில்களும், ஜட்செர்லா, மெஹ்புப்நகர், கட்வால், கர்ணூல் சிட்டி, ட்ரோனாச்சலம், கூட்டி,தாடிபட்ரி, யெராகுண்ட்லா, கடப்பா, ரஷம்பேட்டா, ரேணிகுண்டா, புத்தூர், திருத்தணி, அரக்கோணம், சென்னை எழும்பூர்- தாம்பரம் ஆகிய ரயில்வே நிலையங்களில் நின்றுச்செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காச்சிகுடா- செங்கல்பட்டு சிறப்பு ரயில் கூடுதலாக பெரம்பூர், மாம்பலம் இடையே நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு-காச்சிகுடா சிறப்பு ரயில் கூடுதலாக எர்ணாக்குளம், கொடுரு இடையே நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

2. ரயில் வண்டி எண் 07643/07644 செங்கல்பட்டு -காக்கிநாடா - செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள்

வண்டி எண் 07643 செங்கல்பட்டு - காக்கிநாடா சிறப்பு ரயில் நாளை முதல் தினமும் செங்கல்பட்டிலிருந்து மாலை 16.00 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 09.35 மணி அளவில் காக்கிநாடா சென்றைடயும்.

அதேபோல் வண்டி எண் 07644 காக்கிநாடா- செங்கல்பட்டு சிறப்பு ரயில், காக்கிநாடா நாளை மறுநாள் (டிசம்பர் 7) முதல் தினமும் மதியம் 14.30 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 07.25 மணி அளவில் செங்கல்பேட்டைச் சென்றடையும்

இந்த இரு சிறப்பு ரயில்களும், தாம்பரம், சென்னை எழும்பூர், கும்மிடிபூண்டி, சூலூர் பேட்டை, குண்டூர், நெல்லூர்,பிட்குண்டா, காவாலி, சிங்காரயாகொண்டா, ஆண்கோல், வெட்டபலேமு, சிர்ராலா, பாபட்லா, நிடும்புரோலு, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைக்கலூர், அக்கிவிடு, பீமாவரம், டனுகு, நிடடாவோலு, ராஜ்முந்திரி, துவாரபுடி, அணபார்த்தி,சாமல்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு-காக்கிநாடா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலானது கூடுதலாக, நயுடுபேட்டா, கோதாவரி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும். அதேபோல்,காக்கிநாடா-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில் கூடுதலாக மாம்பலம், புது குண்டூர், மங்கலக்கிரி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ரயில்களுக்குமான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: குன்னுாரில் தனியார் மலை ரயில் இன்று முதல் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.