ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 24 - மேஷம் முதல் மீனம்

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Sep 24, 2021, 6:10 AM IST

மேஷம்

சில முடிவுகள் எடுப்பது கடினமாக இருந்தாலும், நீங்கள் உறுதியாக இருந்தால் எளிதாக முடிவெடுக்கலாம். உங்களது நோக்கம், உணர்வுரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முடிவு ஒன்றை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றப் பாதையில், சிறிது நிதானமாகச் செயல்படவும்.

ரிஷபம்

இன்று, நிச்சயமாகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவதற்கான நாள் அல்ல (அது சாதரணமான விஷயங்களுக்காக என்றாலும்கூட). புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காதல் துணையுடன், உல்லாசமாக இருத்தல் அல்லது ஸ்பாவில் இளைப்பாறுதல் போன்றவற்றின் மூலம் உங்கள் சோம்பல் நீங்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்குச் செலவு ஏற்படும் நாள் இது.

மிதுனம்

செயல்கள், உணர்ச்சிகள் இடையே சமநிலையைப் பராமரிக்க நீங்கள் பெரிதும் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றி அடையவில்லை என்றாலும்கூட உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பழகும்போது பெரிதும் ஏமாற்றம் ஏதும் இருக்காது. உங்கள் காதல் துணையுடன் நீங்கள் சிறந்த வகையில் நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆனால் உங்கள் உடல் தோற்றம், உங்களுக்குச் சிறிது கவலையை ஏற்படுத்தலாம்.

கடகம்

அதிர்ஷ்டலட்சுமி உங்கள் கதவைத் தட்டும் நாள். அசையா சொத்துகளில் நீங்கள் மேற்கொண்ட முதலீட்டால் உங்களுக்குச் சிறப்பான லாபம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தைப் பொறுத்தவரை, உயர் அலுவலர், உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு முழு ஆதரவுடன் இருப்பார்கள். இன்று நீங்கள் தொடங்கும் எல்லா காரியங்களிலும் உங்களுக்குப் பலன் கிடைக்கும்.

சிம்மம்

எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இன்று காணப்படுவீர்கள். இன்று நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் நட்சத்திரங்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எந்த அளவுக்கு நீங்கள் உற்சாகத்துடன் செயல்படுகிறீர்களோ அந்த அளவுக்குச் சவால்களில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள்.

கன்னி

நிதி ரீதியாக நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம். எனவே, பெரிய முடிவுகளை எடுக்கும்போது, உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசித்துச் செயல்படவும். உங்களிடம் உள்ள விலைமதிப்பில்லா சொத்துகள் அல்லது பொருள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நீங்கள் எடுக்கும் முடிவு நீண்ட காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், புதிய திட்டங்கள் அல்லது சட்டப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.

துலாம்

இன்றைய நாள் உங்களுக்குச் சிறப்பான ஒன்றாக இருக்கும். உங்களிடம் உள்ள திறமையை உலகிற்கு வெளிப்படுத்துவீர்கள். புதிய துணிகள் வாங்க ஆர்வமுடன் இருப்பவர்களுக்கு, இன்று அவற்றை வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து, கவனமாகப் பேசவும் செயல்படவும் வேண்டும் என உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பகல் கனவு காண்பதிலேயே நீங்கள் நேரத்தைச் செலவிடுவதை உணரலாம். இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, இன்று உங்களுக்குச் சிறப்பான நாளாகவே அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விருச்சிகம்

உங்களுக்கு இன்று எரிச்சலும் கோபமும் அதிகம் ஏற்படக் கூடும். அது வரக்கூடிய அதிர்ஷ்டத்தை பாதிக்கும். சச்சரவுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், மாலையில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நீங்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் உணரும் வாய்ப்பு உள்ளது.

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் மிகுந்ததாக இருக்கும். மிக சிக்கலான பணிகளாக இருந்தாலும், விரைவில் வெற்றிகரமாக முடியும். தர்க்கரீதியான உங்கள் அணுகுமுறை, நீண்ட நாள் பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும்.

மகரம்

கடந்த சில மாதங்கள் உங்களுக்கு மிக கடினமானதாக இருந்தன. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடனான சந்தோஷத்தை இழந்திருப்பீர்கள். உங்கள் அர்ப்பணிப்பும் உழைப்பும் நீங்கள் அடைய விரும்பிய உயரத்துக்கு உங்களை இட்டுச்செல்லும். மிக ஓய்வாக உட்கார்ந்து பலன்களை அறுவடை செய்து அனுபவிக்க வேண்டிய நேரம் இது.

கும்பம்

இன்றைய நாள், மிகச் சிக்கலான பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீர்வு காணும் வகையில் இருக்கும். சிலர் தங்கள் சுமைகளையும் பொறுப்புகளையும் உங்கள் மீது இறக்கிவைக்கலாம். உங்கள் பலவீனங்களை வலுவாக்க இது உங்களுக்கு மிகவும் பொன்னான தருணம். எனவே எரிச்சல் அடையாமல் மிகக் கவனமாக இருக்கவும்.

மீனம்

உங்களுக்கு இன்று சாதகமான சூழ்நிலை இல்லை. எனவே, நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இதையும் படிங்க: கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.