ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூலை 17 - இன்றைய ராசி பலன் - மேஷம் முதல் மீனம்

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய (ஜூலை 17) ராசிபலன்களை இங்கு காணலாம்.

இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்
author img

By

Published : Jul 17, 2022, 6:47 AM IST

மேஷம்: உங்களுக்கு பெரிய அளவிலான நண்பர் வட்டம் இருக்கலாம். அவற்றில் பெரும்பாலானோர் சாதாரண நண்பர்களாக இருந்தாலும், சிலநேரங்களில் உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, சில சிக்கல்களில் இருந்து உங்களை வெளிகொணர அவர்கள் உதவலாம். நண்பர்களின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும் சந்தர்ப்பங்கள் அமையும்.

ரிஷபம்: மக்கள் மற்றும் பொருட்கள் மீது இன்று நீங்கள் அதிக உணர்வுபூர்வமாக உரிமை கொண்டாடலாம். எல்லாவற்றின் மீதும், குறிப்பாக மனிதர்கள் மீது சந்தேகமும், அவநம்பிக்கையும், பாதுகாப்பற்ற உணர்வுகளும் தோன்றலாம். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மீதும் சந்தேகம் ஏற்படும் சாத்தியங்களும் உள்ளன. வீட்டில் சங்கடமான சூழலும், மகிழ்ச்சிக்கான ஏக்கமும் வெளிப்படும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்காது. கவனமாக, விவேகமாக நடந்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் உங்கள் ஆசை இன்று ஊக்கமடையும். சுற்றுலா பயணத் திட்டத்தை திட்டமிடுவீர்கள். இது பயணத்திற்கு உகந்த நேரம். உங்கள் பயணத்திட்டத்தை பட்ஜெட்டுக்குள் அடங்குமாறு திட்டமிடுவீர்கள்.

கடகம்: வேறு எதையும் விட வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மிகுந்த விவேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் கொடுக்கப்பட்ட வேலையை விரைவில் நிறைவேற்றுவீர்கள். வேலை செய்வதற்கான உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

சிம்மம்: சிரமங்கள் மற்றும் தடைகளை திறமையோடு கையாள்வதோடு, எப்படியாவது வெற்றியடைவதே உங்கள் திட்டவட்டமான இலக்காக இருக்கும். தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக தொடரும்.

கன்னி: உங்கள் பேச்சுத்திறமை மற்றும் படைப்பாற்றலே உங்களுக்கு வல்லமை மிக்க ஆயுதங்கள் என்றே சொல்லலாம். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும் மகிழ்ச்சியையும் நீங்கள் பரப்ப வேண்டும். ஏதாவது அழுத்தமோ அல்லது சுமையோ இருந்தால் மட்டுமே, உங்கள் கற்பனை முழுமையாக வெளிப்படும்.

துலாம்: உங்களுடைய வட்டத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பார். எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் மற்றொரு கூட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பீர்கள். உங்கள் தொழில் திறமையும், வேலையில் காட்டும் அக்கறையும் உரிய மதிப்பைப் பெறும்.

விருச்சிகம்: முதலாளியிடம் இருந்து திட்டு வாங்க வேண்டியிருக்கும். மேலும், சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்காது. தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் புதுமுகங்களுக்கு நேர்காணலில் வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.

தனுசு: தேவையற்ற செலவுகள் உங்களை இன்று சிந்திக்கவைக்கலாம். திட்டமிடுதல் மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக சிந்திக்க செலவிடுவதில் நேரம் விரயமாகும். கடுமையான பணிச்சுமைக்கு பிறகு உற்சாகமான மாலை மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்.

மகரம்: அங்கும் இங்கும் அலைந்து திரிந்து இன்றைய வேலையை செய்து முடித்த பிறகு, எதிர்காலத்திற்காக என்ன செய்யலாம் என்பதை திட்டமிட, நாளின் எஞ்சிய பகுதியை செலவிடுவீர்கள். இன்று திடீர் லாபம் கிடைக்கலாம். இருப்பினும், அந்த லாபத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு நல்ல திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

கும்பம்: எதிர்கால திட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்வீர்கள். திட்டங்கள் பரவாயில்லை என்றாலும், யதார்த்த சூழ்நிலையில் வாழ்ந்தால் தான் அதற்கான சக்தியைப் பெறமுடியும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில், ஏற்கனவே உங்களுக்கு கிடைத்திருக்கும் நற்பெயருக்கு உங்களுடைய தாராள மனப்பான்மை மேலும் மெருகூட்டும்.

மீனம்: வாழ்க்கைக்கான நிதித் திட்டத்தை தீட்டுவது என்பது மிகவும் முக்கியமானது என்றாலும் கடினாமனதும்கூட. இன்று உங்கள் ஆற்றலை இதற்காகவே செலவிடுவீர்கள். உங்களிடம் உள்ள ரொக்கத்தை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு தென்படுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் எதிர்பாராத நோயால் வருத்தம் ஏற்படும் என்றாலும், அது விரைவில் சரியாகிவிடும் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: அடுத்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.