மேஷம்
இன்று, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், முறையான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைபிடிப்பது நன்மை பயக்கும். புதிய உணவு ஏதேனும் சுவைத்துப் பார்க்க உங்களுக்கு விருப்பம் இருக்கும். நீங்கள் நெடுநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழிப்பது பலன் தரும்.
ரிஷபம்
நீங்கள், இன்று உங்களது நெருங்கிய நண்பர்கள், குறிப்பாக உங்கள் எதிர் பாலினத்தை சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டு உள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைகூடும்.
மிதுனம்
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, வீட்டில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும். அதை சமாளிக்க முடியாமல் நீங்கள் திணறும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் மனநிலை பாதிக்கப்படலாம். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.
கடகம்
நிதி நிலைமையை, புத்திசாலித்தனத்துடன் சமாளிக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும், முன்னேற்றமும் வெற்றியும் ஏற்படும். பணிகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். எனினும் உங்களுக்கு ஆர்வமான விஷயங்களில் நீங்கள் நேரத்தை செலவழிப்பீர்கள்.
சிம்மம்
பல்வேறு மக்கள், உங்களை பாராட்டுவார்கள். ஆனால், நடந்தவற்றை நினைத்து நீங்கள் திருப்தி அடைய மாட்டீர்கள். சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல், அது குறித்து கவலை கொள்வீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, நீங்கள் உணர்வுபூர்வமாக பாதிக்கப்படுவீர்கள்.
கன்னி
இன்று குடும்ப விவகாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணத்தை உங்கள் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தக விஷயத்தைப் பொறுத்தவரை, நிலைமை சாதாரணமாக இருக்கும். மாலையில் சிறிது ஓய்வாக நேரத்தை கழிக்கலாம். கோயிலுக்கு சென்று வழிபடும் வாய்ப்பும் உள்ளது.
துலாம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாலை வரை, உங்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால், அனுமானிக்க முடியாத வகையில் இருப்பீர்கள். என்று இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனால் அதனை எதிர்கொள்ள, மனதை தயார்படுத்திக் கொள்ளவும்.
விருச்சிகம்
இன்று, காதல் உணவானாலும் சரி அல்லது உங்கள் மேலதிகாரி ஆனாலும் சரி, அவர்கள் மனதை வெல்ல சரியான நேரமாகும். உங்கள் உணர்ச்சிகளை அவர்களிடம் வழிப்படுத்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில், திட்டமிட்ட வகையில் பணிகளைத் தொடங்குவீர்கள். அவன் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.
தனுசு
இன்று, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் அது கிடைக்காமல் போகாது. அதனால் ஏமாற்றம் அடைய வேண்டாம். அது உங்கள் பணியை பாதிக்கும். நல்லதை நினைத்து, பொறுமையாக காத்திருக்கவும்.
மகரம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது சாதனைகளின் காரணமாக, வாழ்க்கையில் சாதிப்பதற்காக பிறந்த பிறவியைப் போல் உணர்வீர்கள். நீங்கள் இன்று எது செய்தாலும், அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கிடைக்கும். எனினும், முயற்சிகள் ஏதும் இன்றி, வெற்றி கிடைக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம். நாளை, உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால், இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். உங்களது நண்பர்கள் உங்களது செயல் திறனையும் ஆளுமைப் பண்பையும் பாராட்டுவார்கள்.
கும்பம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, உங்களது திட்டமிடல் இருக்குல்ல போட்டியாளர்களுக்கு இருப்பீர்கள். சந்தேகங்களும் கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.
மீனம்
நிதி நிலைமையை பொருத்தவரை, இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுக்கு உள்ள தொடர்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.