மேஷம்
இன்றைய நாளை பொறுத்தவரை, நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல் உணர்வீர்கள். உறவுகளை பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்
உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்னைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் சிறந்த வெற்றியடைவீர்கள்.
மிதுனம்
கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்
இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒரு செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு சிறந்த நாளாகும். இன்றைய தினத்தில், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்
நீங்கள் இன்று அனைத்து தரப்பிலிருந்தும் புகழ்ச்சியை பெறுவீர்கள். இன்று நடக்கும் அனைத்து விஷயங்களும், உங்களுக்கு சந்தோஷத்தை தரும் என்று கூறி விட முடியாது. உங்களை பாதித்து வந்த கேள்விகளுக்கு விடை காண்பீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, உணர்வுபூர்வமாக பாதிக்கப்படுவீர்கள்.
கன்னி
இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். அது தொடர்பான விஷயங்கள் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படும். வர்த்தகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாலையில் சிறிது, ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். கோவிலுக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.
துலாம்
இன்று நீங்கள், பலவிதமான மன நிலைகளால் பாதிக்கப்படுவீர்கள். மாலை வரை, மனக் குழப்பங்கள் இருக்கும். இன்று மாலை உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. மிகச்சிறந்த நிகழ்வு ஒன்று ஏற்படக்கூடும் என்றாலும், பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் மனநிலையுடன் இருக்கவும்.
விருச்சிகம்
உங்களது செயல் திறன், உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும். இன்று உங்கள் உணர்வுகளை நீங்கள் அதிகம் வெளிப்படுத்துவீர்கள். தொழில் துறையை பொருத்தவரை, புதிய திட்டங்களை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
தனுசு
உங்களது திறமைக்கான அங்கீகாரம், இப்போது கிடைக்கவில்லை என்றாலும், பின்னர் கிடைக்கும். அதனால் பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. ஏமாற்ற உணர்வு ஏற்பட்டால் அது உங்கள் செயல்திறனை பாதிக்கும். அதனால் அமைதியாக பொறுமையுடன் இருக்கவும்.
மகரம்
உங்களது வெற்றி, உங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும். இதன்மூலம் எந்தவித கடினமான நிலைமையையும் சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது. எனினும், உங்கள் சாதனைக்கு கடின உழைப்பு முக்கியமான காரணமாக இருந்து வந்துள்ளது. நண்பர்கள் உங்கள் செயல்திறனையும், எதையும் சாதிக்கும் மனப்பான்மையையும் பாராட்டுவார்கள்.
கும்பம்
இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது செயல் திறன், தீவிரமான நடவடிக்கைகள் உங்கள் போட்டியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள். அதனால் அனைத்து தடைகளும் நீங்கும். உங்கள் வெற்றி, கருணை மற்றும் கடின உழைப்பின் காரணமாக அனைவர் மனதையும் வெல்வீர்கள்.
மீனம்
இன்று நிதி ஆதாயம் அதிகம் இருக்கும். வர்த்தகம் மற்றும் பல்வேறு முதலீடுகளில் இருந்து பணவரவு இருக்கும். சிறந்த வகையிலான பொதுத் தொடர்பு காரணமாக ஆதாயம் இருக்கும். எதிர்பாராத வகையில், முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்வீர்கள்.
இதையும் படிங்க: கிராம சபைக் கூட்டம்: தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளருடன் நேர்காணல்