அமராவதி: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இதனையடுத்து இந்த புதிய புயலுக்கு 'அசானி' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் இன்று வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(மே 10) 'அசானி' புயல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா இடையேயான கடற்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் மற்றும் மழை பெய்யும் எனவும், மேற்கு வங்க மாநிலத்தின் தெற்குப் பகுதி, கொல்கத்தாவிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை முதல் கடலோர ஆந்திராவில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கனமழை பெய்யும் என்றும், ஒடிசாவின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை, மே 11 ஆம் தேதி, வட கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், கடலோர ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD (இந்திய வானிலை ஆய்வு மையம்)கணித்துள்ளது.
இதையும் படிங்க:வங்கக்கடலில் உருவானது 'அசானி' புயல்...எங்கு கரையைக் கடக்கும்?