மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சைபர் தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் அனிஸ் ஷகீல் அன்சாரிக்கு (28) ஆயுள் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அனிஸ் ஷகீல் அன்சாரி 2014ஆம் ஆண்டு அமெரிக்கப் பள்ளி ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய வழக்கில் தீவிரவாத எதிர்ப்பு படையினரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 115, 120 (B) பிரிவுகள் 43(A), 66(F) ஆகியவற்றின் கீழ் ஏடிஎஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சைபர் தீவிரவாதம் தொடர்பான அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இதுவாகும். குற்றம் சாட்டப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியரான அனிஸ் ஷாகிர் அன்சாரிக்கு சைபர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலி சுயவிவரத்தை உருவாக்கி வெடிகுண்டு தயாரிக்க சதித் திட்டம் தீட்டியதால் இவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர்கள் மீது பாலியல் புகார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸ்வப்னா சுரேஷ்