ETV Bharat / bharat

உங்களது இன்ஸ்யூரன்ஸ் பணத்தை குறிவைக்கும் மோசடிக்காரர்கள் - உஷார்! - சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்திகள் மின்னஞ்சல்கள்

இன்ஸ்யூரன்ஸ் பாலிசி மோசடிகள் அதிகரித்து வருவதால், பாலிசிதாரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வந்தால், வாடிக்கையாளர் மையத்தை அணுக வேண்டும்.

Cyber
Cyber
author img

By

Published : Nov 21, 2022, 5:33 PM IST

ஹைதராபாத்: பொதுமக்கள், தங்களது குடும்பத்திற்கான நிதிப் பாதுகாப்பு, அவசரகால மருத்துவத் தேவை உள்ளிட்டவற்றிற்காக இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் எடுக்கும் வாடிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரோனா காலத்திற்குப் பிறகு இளைஞர்கள் இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் எடுக்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பாலிசிதாரர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இதுபோன்ற மோசடிகளுக்குக் காரணம். இந்த மோசடிக்காரர்கள், பாலிசிதாரர்களை அழைத்து அவரது பாலிசிகள் ரத்தாகும் நிலையில் இருப்பதாகக் கூறி அச்சுறுத்துகின்றனர்.

க்ளைம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் அனுப்புவதுபோலவே மின்னஞ்சல்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்புகிறார்கள். எடுத்துக்காட்டாக, "உடனடியாக உங்களது ப்ரீமியம் தொகையை செலுத்துங்கள், இல்லையெனில் உங்களது பாலிசி ரத்தாகிவிடும்" என்று குறுஞ்செய்தியுடன் லிங்க்கையும் அனுப்பி, பணத்தைப் பறிக்கிறார்கள்.

பாலிசி முழுவதுமாக முதிர்ச்சியடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். ப்ரீமியம் செலுத்தக்கோரி, இதுபோன்ற குறுஞ்செய்திகளையும், மின்னஞ்சல்களையும் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் அனுப்பாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால், உடனடியாக குறிப்பிட்ட இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை அணுக வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் பலர் ஆன்லைனிலும் பாலிசிகளை எடுக்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு பாலிசிகளை எடுத்தாலும், அனைத்து பாலிசிகளும் பெரும்பாலும் டிஜிட்டல் வடிவத்திலேயே இருக்கின்றன. எனவே, டிமேட் கணக்குகளின் யுசர் ஐடி, பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மின்னஞ்சல் இணைப்புகள், மால்வேர், கீ-லாக்கிங் சாஃப்ட்வேர், ஸ்பைவேர் உள்ளிட்டவற்றின் மூலமாக, பாலிதாரர்களின் லாகின் விவரங்கள், பாலிசி தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவற்றை மோசடிக்காரர்கள் கண்காணித்து தெரிந்து கொள்கின்றனர்.

அதனால், பொது இடங்களில் இலவச வைஃபை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஸ்வேர்டுகளை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும்; அவற்றை யாருடனும் பகிரக்கூடாது. பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டும். இலவச வைஃபையைப் பயன்படுத்தி வங்கி, முதலீடு, ப்ரீமியம் தொடர்பான எந்தவித ஆன்லைன் பரிவர்த்தனையையும் செய்யக்கூடாது.

மோசடி செய்பவர்கள், பாலிசிதாரர்களின் உறவினர்களிடமும் மோசடி செய்து பணம் பறிக்கிறார்கள். தங்களை பாலிசிதாரர்களின் நாமினி (Nominee) என்றும், பாலிசியின் பலன்களைப்பெற தகுதியானவர்கள் என்றும் கூறி ஏமாற்றுகிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள் மூலம் மொத்தமாக க்ளைம் செய்யப்பட்ட தொகையை, பணமாக எடுத்துத் தருவதாகக் கூறி, அவர்களது தனிப்பட்ட நிதி தொடர்பான விவரங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கேட்கிறார்கள்.

க்ளைம் தொகையை பெற்றுத் தருவதாகக்கூறி முன் கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்கிறார்கள். எந்த ஒரு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் நாமினியிடம் இதுபோன்ற கட்டணங்களை கேட்பதில்லை. இதுபோல யாரேனும் தொடர்பு கொண்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரடியாக கலந்தாலோசிக்க வேண்டும்.

செல்போனில் அழைக்கும் மோசடிக்காரர்கள், "மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால் போதும், உங்கள் பணம் இரட்டிப்பாகும்" போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். அத்தகைய அழைப்புகள் வந்தால், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் அல்லது வாடிக்கையாளர் மையத்தை நேரடியாக அணுக வேண்டும்.

பாலிசியை எடுப்பதற்கு முன், நம் நிதித் தேவைக்கு எந்த வகையான பாலிசி சரியாக இருக்கும் என்பதையும், அதன் முழு விவரங்களையும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கலாம். ஏதேனும் மோசடி நடந்தால், உடனடியாக காவல் துறைக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகள், அதன் பலன்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே, இன்ஸ்யூரன்ஸ் மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க: கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த டிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.