ETV Bharat / bharat

CWG 2022: ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கோஷல் வெண்கலம் வென்றார்! - Common wealth games 2022

காமன்வெல்த் போட்டி 2022 ல், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கோஷல் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

CWG 2022: ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கோஷல் வெண்கலம் வென்றார்!

author img

By

Published : Aug 4, 2022, 11:01 AM IST

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் விளையாடி வருகிறார். இதன் அரையிறுதியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் (11-9 11-4 11-1) நியூசிலாந்தின் பால் காலிடம், இந்திய வீரர் கோஷல் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், நேற்று இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோப்பிற்கு எதிரான போட்டியில் 11-6, 11-1, 11-4 என்ற நேர்செட்டில் கோஷல் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்குவாஷில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதுகுறித்து முன்னாள் தேசிய பயிற்சியாளரும் தற்போதைய அணி மேலாளருமான சைரஸ் போன்சா கூறுகையில், “முதல் ஆட்டம் 18 நிமிடங்கள் நீடித்தது. அந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இருவரில் இளையவரான கோசல், மிகவும் வலிமையானவர்.

நேற்று அவர் அரையிறுதியில் சிறப்பாக விளையாடினார் என்று கருதுகிறேன். பல வருட கடின உழைப்புதான் இதற்கு வழிவகுத்தது. இது இந்தியர்களுக்கு ஒரு சிறந்த நாள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு பளு தூக்குதலில் மற்றொரு பதக்கம் - வெண்கலம் வென்ற லவ்பிரீத் சிங்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.