டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (அக். 16) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், உள்கட்சித் தேர்தல், தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
மேலும், இக்கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் நீண்ட நாள் தேவையாக இருக்கும் தலைவர் பதவி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டுவருகிறார். மேலும்,
இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அல்லாமல், நேரடியாக செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிங்கு எல்லையில் படுகொலை: ஒருவர் சரண்; விவசாய அமைப்பு கண்டனம்