நாட்டின் கோவிட் தடுப்பூசி நிலவரம் குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 142 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 83 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 58 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். நேற்று(டிச.27) ஒரு நாளில் மட்டும் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஒரு நாளில் மட்டும் 135 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.
ஒமைக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி மூன்றாம் தேதி முதல் தடுப்பூசியும், முன்களப் பணியாளர்கள் மூத்த குடிமக்களுக்கு(60 வயதுக்கு மேற்பட்டோருக்கு) ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது என அறிவித்துள்ளது.
மேலும், தேசிய சராசரியை விட குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசின் மருத்துவக் குழு நேரில் சென்று ஆய்வு செய்கிறது.
இதையும் படிங்க: Chandigarh polls: சண்டிகரிலும் தனது தடத்தை வலுவாகப் பதித்த ஆம் ஆத்மி கட்சி