கள்ளக்குறிச்சி மாவட்டம், சோமாசி பாளையத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பராஜ் (23), தமிழரசன் (22). இவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், வில்லியனூரில் நண்பரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த புஷ்பராஜ் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, கீழே இருந்த சாக்கடையில் விழுந்தார். இதனைப் பார்த்து பதறிப்போன மக்கள் உடனடியாக சாக்கடையில் விழுந்த புஷ்பராஜை மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போக்குவரத்து காவல் துறையினர் விபத்தில் காயமடைந்த புஷ்பராஜையும், மேம்பாலத்தில் கிடந்த தமிழரசனையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கடவுளை கொச்சைப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை' - பொன்.ராதாகிருஷ்ணன்