நாசிக்: மஹாராஷ்டிரா மாநிலம் பத்தர்டி ஷிவாரில் கடந்த 4ஆம் தேதி பிற்பகல் தாயிடம் இருந்து பிரிந்த ஒரு சிறுத்தை குட்டி தோட்டத்தில் உள்ளூர்வாசிகளால் கண்டறியப்பட்டது. சிறிது நேரத்தில், அதே இடத்தில் மேலும் இரண்டு குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றுமே தலா ஒரு மாத ஆண் குட்டிகள். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குட்டிகள் குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், 3 குட்டிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, வயலில் பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். பின்னர் சிறுத்தை குட்டிகள் வைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி வனத்துறையினர் தோட்டத்தில் மூன்று ட்ராப் கேமராக்கள் மற்றும் 360 டிகிரி சுழலும் ஆன்லைன் கேமராவை பொருத்தினர். இறுதியாக, அன்று இரவே பெண் சிறுத்தை வயலுக்கு வந்து, தனது மூன்று குட்டிகளை எடுத்துச்சென்றது.
இதையும் படிங்க: விவசாய தோட்டத்தில் நுழைந்த யானை.. பீதியில் பொதுமக்கள்!