ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரராகப் பணிபுரிந்து வந்தவர், ஜவான்.சி.சங்கர் (33).
இவர் இன்று (செப்.21) வழக்கம்போல் முகாமில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அனைத்து வீரர்களும் உடனிருந்தனர்.
இவர்கள் அனைவரும் பயிற்சி மேற்கொண்டு இருக்கும்போது சங்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து சக வீரர்கள் அவரை மீட்டு ஆர்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருந்துவர்கள், அவரை சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தியதையடுத்து, அவரை சதர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
மனைவி கர்ப்பமாகவுள்ள நிலையில் நிகழ்ந்த சோகம்
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததும் தெரியவந்தது.
சிஆர்பிஎஃப் வீரரான ஜவான். சி. சங்கர் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஏழு வயது மகள், நான்கு வயது மகன் உள்ளனர். அவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி, மனைவியின் பிரசவத்திற்கு விடுப்பு எடுக்க இருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : மகன் இறந்த செய்தி கேட்டு தாயும் மாரடைப்பில் உயிரிழப்பு