ETV Bharat / bharat

1 லட்சத்திற்கும் அதிகமான ஆதார் தரவுகள் திருட்டு.. போலி கைரேகை மூலம் பல கோடி பணத்தை சுருட்டிய கும்பல்! - ஆந்திரா செய்திகள்

Fake fingerprint Cyber crime: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதார் தரவுகளை போலி கைரேகை மூலம் திருடி பல கோடி ரூபாயை நூதனமாக கொள்ளை அடித்த கும்பலை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2023, 9:13 PM IST

கடப்பா (ஆந்திரா): ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ராமஞ்சனேயபுரம் பகுதியில் இருக்கும் எலக்ட்ரிக்கல் காலனியைச் சேர்ந்தவர் எஸ் சங்கரய்யா. இவரது வங்கிக் கணக்கில் இருந்து திடீரென 5 ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அதிலும், சங்கரய்யாவுக்கு ஓடிபி (OTP) எதுவும் வராமலே அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமாகி உள்ளது. இதனையடுத்து, அவர் இது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று கடப்பா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

அது மட்டுமல்லாமல், தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் தளத்திலும் சங்கரய்யா புகாரை பதிவு செய்து உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் என்ற பெயரில் ஒரு நபர் சங்கரய்யாவை இணைய வழியாக தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது அவர், தாங்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், தனது வங்கிக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால் சங்கரய்யாவை கொன்று விடுவதாகவும், அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனையடுத்து, சங்கரய்யா இது தொடர்பாக காவல் துறையை அனுகியுள்ளார். இதனையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையைத் தொடங்கி உள்ளது.

அப்போது, தனிநபர்களின் விரல் ரேகை பதிவுகளை வங்கி வணிக ஏஜெண்ட்ஸ் மற்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் ஆதார் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் மூலமாக பெற்று, அதனை நகலாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை சைபர் கிரைம் சிறப்பு படையினர் கண்டுபிடித்து உள்ளனர். இவ்வாறுதான் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து போலியான கைரேகை மூலம் பணத்தை திருடி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

அந்த வகையில், புகார் அளித்த சங்கரய்யாவின் குண்டூர் மாவட்டம் பிராங்கிபுரம் மண்டலில் இருக்கும் அல்லவாரிபலேம் பகுதியில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, சங்கரய்யாவுக்கு இணைய வழியாக அழைத்த நபரின் இடம் கண்டறியப்பட்டு உள்ளது. அப்போது, அவர் கடப்பாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து கடப்பா பழைய பைபாஸ் சாலையில் இருந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நல்லகல்லா வெங்கடேஷ் என்பவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இவர் பிரகாஷம் மாவட்டம், டோர்னலா மண்டல் சுந்தரய்யா காலனியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், இவரது கூட்டாளிகளான மல்லா அஜய், கந்தா கல்யாண், பசுபுலேடி கோபி மற்றும் ஷேக் ஜானி ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

அதேநேரம், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போலி கைரேகையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கணினி ஹார்ட் டிஸ்க்குகள், கார் மற்றும் இதர உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கடப்பா காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதிலும் இருந்து 416 சைபர் குற்றங்கள் மூலம் 5.9 கோடி ரூபாய் பணத்தை நூதனமாக திருடியதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: ரம்மி எப்படி அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாகும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.