மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சாதாரண மக்களிடையே சுற்றுச்சூழலை பரப்புவதற்காக நாட்டின் மிகப்பெரிய இயற்கை புல் கம்பளத்தை உருவாக்கியுள்ளனர். சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு இடையில் கருவரகு எனும் புல் வகையை 1,000 சதுர அடிக்கு வளர்த்து உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் புனே - சோலாப்பூர் சாலையில் பெத் நைகான் என்ற இடத்தில் இந்த புல் கம்பளம் வைக்கப்பட்டுள்ளது. இதில், இயற்கைச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத புல்லில் இருந்து கம்பளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கம்பளத்தை வீட்டுக்குள் மட்டுமின்றி விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், கொல்லைப்புறம் போன்றவற்றிலும் பெரிய அளவில் பயன்படுத்தலாம்.
இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் பராமரிப்புச்செலவு மிகவும் குறைவு. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த கம்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சினாலும், இந்த கம்பளம் மிகவும் பசுமையாகவும் புதியதாகவும் இருக்கும். இந்த கம்பளம் சுற்றுச்சூழலுக்கு நன்மை தருவது மட்டுமின்றி பல உடல் நலன்களையும் கொண்டுள்ளது.
செருப்பு அணியாமல் இந்த விரிப்பில் நடந்தால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்தத் திட்டம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குத்தொழில் மற்றும் வணிகத்தை உருவாக்க உதவும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம்.
இந்த கம்பளம் கறுப்பு மண்ணிலும், கடலுக்கு அருகில் உள்ள உவர் நீர் மற்றும் கொங்கனில் உள்ள சிவப்பு மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது. குறைந்த மழை மற்றும் அதிக மழை பெய்யும் பகுதிகளிலும் நன்றாக வளரும்.
மழையின் அளவு அதிகமாக இருந்தாலும் இந்த புல் கம்பளத்தில் துர்நாற்றம் வீசுவதில்லை. இந்த விரிப்புகள் இயற்கையாகவே உருவாக்கப்படுவதால், எந்த விஷ ஊர்வனவும் அவற்றில் வாழ முடியாது. எனவே, இது மிகவும் பாதுகாப்பானது; எனவே இதனை, வீடு மற்றும் தோட்டத்தில் பயன்படுத்தப்படலாம் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இதையும் படிங்க: தீக்குச்சியில் உருவான சார்லி சாப்ளின்; கின்னஸ் சாதனைப் படைத்த இளைஞர்