டெல்லி: அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியைத் தயாரித்துவருகிறது. இந்நிலையில், கோவோவேக்ஸ் தடுப்பூசியின் ஆய்வு இந்தியாவில் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, எஸ்ஐஐ தலைமை அலுவலர் தனது கூட்டாளர்கள் மற்றும் இங்கிலாந்தில் பங்குதாரர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். "இக்கூட்டத்தில், இங்கிலாந்தில் உள்ள எங்கள் கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான ஒரு சிறந்த சந்திப்பு இருந்தது. இதற்கிடையில், கோவிஷீல்டு தயாரிப்பு புனேவில் முழு வீச்சில் தயாரிக்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கோவிட்-19 தடுப்பூசி 'கோவிஷீல்டு' விலையை புதன்கிழமை மாநிலங்களுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 முதல் ரூ.300 வரை குறைக்கப்படுகிறது’’ என்று பூனவல்லா ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday