இது குறித்து பேசிய அமைச்சர் கே. சுதாகர், "ஏப்ரல் 11ஆம் தேதிமுதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் பணியிடங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்தலாம். மக்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும்.
குறைந்தது 100 பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், நேரடியாகத் தடுப்பூசி செலுத்தப்படும். பல ஐடி நிறுவனங்கள், வளாகத்திலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதுவரை 48 லட்சத்து 32 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கரோனா தொற்று பாதிப்பில் நக்மா!